கடைசிவரை பரபரப்பு; சந்தர்போல் வைத்தார் ஆப்பு மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்தது இலங்கை அணி

கடைசி வரை பரபரப்பு…. கடைசியில் இலங்கை அணிக்கு சந்தர்போல் வைத்தார் ஆப்பு. நேற்றுமுன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல்போட்டியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவிலிருந்த இலங்கை அணிக்கு கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி அடிகொடுத்தார் சந்தர்போல்.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி இரு பந்துகளிலும் 10 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் அந்த ஓவரை வீசியிருந்தார் சமிந்த வாஸ். ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க, கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டன. சமிந்த வாஸ் அந்தப் பந்தை தாழ்வாக மேலெழுப்பி வீச, அதனை உற்று அவதானித்து சிக்ஸராக விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் சந்தர்போல்.
ஒருநாள் போட்டிகளில் வரலாற்றில் கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் தேவையென்ற நிலையில், அந்தப் பந்நில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையை சந்தர்போல் பெற்றுள்ளார்.
முன்னதாக, 1985ஆம் ஆண்டு இந்தியாவுக்கு  எதிராக சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் கடைசிப் பந்தில் நான்கு ஓட்டங்கள் தேவையென்ற நிலையில், அந்தப் பந்நில் சிக்ஸர் அடித்து அணியைக் கரை சேர்த்திருந்தார் பாகிஸ்தானின் ஜாவிட் மியாண்டாட்.
2006ஆம் ஆண்டு சிம்பாப்வே வீரர் பிரண்டன் ரெய்லர், பங்களாதேஷûக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் நான்கு ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றிக்கரை சேர்த்திருந்தார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரு அணிகளுக்குமிடையிலான இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப வீரர்களான கிறிஸ் கெய்லும், டெவன் சிமித்தும் நிதானமானமாக இலக்கைக் கலைக்க ஆரம்பித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களைச் சேர்த்திருந்த நிலையில் குலசேகரவின் வேகத்தில் டெவன் சிமித் 14 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
தொடர்ந்து வந்த சர்வானும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கிறிஸ் கெய்ல் 52 ஓட்டங்களுடன் (81 பந்துகள், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) அஜந்த மெண்டிஸின் சுழலில் வெளியேறினார். அடுத்த ஓவரில்  குலசேகரவின் பந்துவீச்சில் சர்வான் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அந்த ஓவரிலேயே அடுத்துவந்த சாமுவேல்ஸும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களம்புகுந்த சந்தர்போல் நிதானமாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தார். அவருக்கு மறுமுனையில் வந்த வீரர்கள் சரியான ஒத்துழைப்புக் கொடுக்கத் தவறினர். பிராவோ 36 ஓட்டங்களுடனும், பிறவ்ணி 15 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
அடுத்துவந்தவர்களான டரன் சமி (1), ஜெரோமி ரெய்லர் (9), சுலைமான் பென் (0) என விரைவாக விக்கெட்டைப் பறிகொடுக்க ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் சென்றது. கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஜோடியாக சந்தர்போலும், எட்வாட்ஸும் களத்தில் இருந்தனர்.
முதல் பந்து ஓட்டமற்றதாகப் போக அடுத்த மூன்று பந்துகளிலும் மூன்று ஓட்டங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து கடைசி இரு பந்துகளிலும் முறையே பவுண்டரி, சிக்ஸர் என சந்தர்போல் விளாச சாதனைமிகுந்த வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பதிவுசெய்தது.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்டிருந்த இலங்கை அணி சரியான ஆரம்பத்தைப் பெறத் தவறியிருந்தது. ஆரம்ப வீரர்களான மஹேல உடவத்த ஓட்டமெதுவும் பெறாமலும்,  உபுல் தரங்க 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த சங்ககார 23 ஓட்டங்களுடனும், மஹேல ஜெயவர்த்தன ஒரு ஓட்டத்துடனும், டில்சான் 2 ஓட்டங்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து இலங்கை அணி.
இந்நிலையில் 6ஆவது விக்கெட்டில் ஜோடி÷ சர்ந்த சமர சில்வா மற்றும் சமார கப்புகெதர ஆகியோர் சிறப்பாக ஆடி அணியைத் தூக்கி நிறுத்தினர். இருவரும் 159 ஓட்டங்களைச் சேர்த்து அணி 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர். இந்நிலையில் 67 ஓட்டங்களுடன் சமர சில்வா ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்புகெதர கடை ஓவரின் ஐந்தாவது பந்துவரை களத்தில் நின்று 95 ஓட்டங்களைக் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் அவரின் கூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 117 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களையும் தனது ஓட்ட எண்ணிக்கையில் சேர்த்திருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களைச் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சில் பிராவோ 4 விக்கெட்டுகளையும், எட்வாட்ஸ் 2 விக்கெட்டுகளையும், ரெய்லர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
சிறப்பாகப் பந்துவீசி இலங்கை அணியின் முன்னணி வரிசையைத் தகர்த்தெறிந்த பிராவோ ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: