Posted on April 26, 2008 by arulrangan
யூசுப் பதான் மற்றும் கிரேம் சிமித் ஆகியோரின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, லக்ஸ்மனின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல். ருவென்ரி/20 போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் “திரில்’ வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிச் சதம் கடந்த சைமண்ட்ஸின் ஆட்டம் இறுதியில் அவரது பந்துவீச்சாலேயே வீணானது.
இந்தியன் கிரிக்கெட் சபையின் (பி.சி.சி.ஐ.) சார்பில் இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகள் நடக்கின்றன. நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் லக்ஸ்மன் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 11, 2008 by arulrangan
கடைசி வரை பரபரப்பு…. கடைசியில் இலங்கை அணிக்கு சந்தர்போல் வைத்தார் ஆப்பு. நேற்றுமுன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல்போட்டியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவிலிருந்த இலங்கை அணிக்கு கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி அடிகொடுத்தார் சந்தர்போல்.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி இரு பந்துகளிலும் 10 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் அந்த ஓவரை வீசியிருந்தார் சமிந்த வாஸ். ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடிக்க, கடைசிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டன. சமிந்த [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 7, 2008 by arulrangan
ராம்நரேஷ் சர்வான் சதம் விளாச, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 11 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சமனிலைப்படுத்தியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றியது. தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டி [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 7, 2008 by arulrangan
சொந்த மண்ணில் இந்திய அணிக்கு அவமானம். அஹமதாபாத் இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சொதப்ப, தென்னாபிரிக்காவிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. பந்துவீச்சு துடுப்பாட்டம் என இரண்டிலும் கலக்கிய தென்னாபிரிக்க அணி மூன்றே நாளில் சாதித்துக் காட்டியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் சமனிலையில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் அஹமதாபாத் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 4, 2008 by arulrangan
அஹமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டீ வில்லியர்ஸ் இரட்டைச் சதம் விளாச தென்னாபிரிக்க அணி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. ஜக் கலிஸும் சதம் விளாசி அணியின் ஓட்டக்குவிப்புக்கு வலுச் சேர்த்தார்.
நேற்று நிறைவுபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 494 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் மூலம் இந்தியாவை விட 418 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 4, 2008 by arulrangan
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மழையால் இடைக்கிடையே குழம்பிய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதிரடியாக ஆடிவரும் திலகரட்ண டில்சான் 57 பந்துகளில் 58 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியின் ஓட்டக்குவிப்புக்கு உதவிபுரிந்து வருகின்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி 121 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 3, 2008 by arulrangan
http://content-sl.cricinfo.com/wivsl/engine/current/match/319133.html
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 3, 2008 by arulrangan
http://content-sl.cricinfo.com/indvrsa/engine/current/match/332912.html
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 3, 2008 by arulrangan
தென்னாபிரிக்க வேகங்கள் அச்சுறுத்த நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கதை வெறும் 20 ஓவர்களுக்குள் 76 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. முன்வரிசை வீரர்கள் ஐவரும் ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையில் விக்கெட்டைப் பறிகொடுத்து பவிலியன் திரும்பினர். முதல் டெஸ்ட் டில் முச்சதம் விளாசிய ஷேவாக் வெறும் 6 ஓட்டங்களுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on April 1, 2008 by arulrangan
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான துடுப்பாட்டத் தர வரிசையில் இந்திய வீரர் ஷேவாக் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் குமார் சங்ககார தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கின்றார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய தொடக்க வீரரான ஷேவாக், 13 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »