சென்னை டெஸ்ட் சமனிலையில் முடிவு

சென்னையில் நடைபெற்றுவந்த இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
தென்னாபிரிக்கா அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நேற்றைய கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து போட்டி சமனிலையில் முடிவுபெற்றது.
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க  அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 540 ஓட்டங்கள் எடுத்தது.                                     [...]