இந்தியா தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் ஆட்டத்தின் நேரடி ஓட்டவிவரத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

http://content-www.cricinfo.com/indvrsa/engine/current/match/332911.html

சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: தென்னாப்ரிக்கா 2வது இன்னிங்ஸ் : 131/1

சென்னையில் நடைபெறும் இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் ‌போட்டியின் 4ம் நாள் ஆட்டநேர இறுதியில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ரன் எடுத்துள்ளது. முன்னதாக இந்தியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 627 ரன்கள் எடுத்தது. ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, சதம் அடித்து சாதனை புரிந்தார். சேவாக் 319 ரன்களில் அவுட் ஆனார். சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தென்னாப்ரிக்கா முதல் [...]

டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை

டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து ராகுல் டிராவிட் சாதனை புரிந்தார்.சென்னையில் இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் 80 ரன்கள் எடுத்த போது இச்சாதனை புரிந்தார். இந்த சாதனையை செய்த ஆறாவது வீரராவார். இதற்கு முன் இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகியோர் ‌டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்

சென்னை டெஸ்ட்: இந்தியா புதிய சாதனை

சென்னை: சென்னை டெஸ்டில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒரே இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. .இந்திய அணி சென்னை டெஸ்ட் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 627 ரன்கள் எடுத்தது.இதற்குமுன் 2004-2005 ல் நடைபெற்ற கான்பூர் டெஸ்டில் 466 ரன்கள் எடுத்திருந்தது.இலங்கை அணி 2006 கொழும்பு டெஸ்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 756 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இன்டீஸ் [...]