மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலக்கு 437 ஓட்டங்கள்

கயானாவில் நடைபெற்றுவரும் இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 437 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேற்றுமுன்தினம் நிறைவுபெற்ற நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதற்கு 341 ஓட்டங்களைப் பெறவேண்டும். அணியின் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. களத்தில் சர்வான் 34 ஓட்டங்களுடனும், டெவன் சிமித் [...]

பனிஷரின் சுழலில் மாண்டது நியூஸிலாந்து; டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து

மொன்றி பனிஷரின் சுழலில் நியூஸிலாந்து அணி சிக்கித் தவிக்க, நேப்பியரின் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 21 என்ற கணக்கில் கைப்பற்றிக்கொண்டது.
553 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 431 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. நியூஸிலாந்தின் 10ஆவது வீரராகக் களமிறங்கிய வேகப் பந்துவீச்சாளரான ரிம் [...]