வெற்றியை நோக்கி இங்கிலாந்து

நேப்பியர், மார்ச் 26
நேப்பியரில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
553 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி, நேற்று நிறைவுபெற்ற நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களைப் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் உள்ளது.
முன்னதாக, நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆரம்பித்தது. [...]

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரம்; முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 9-269

கயானா, மார்ச் 26
கயானாவில் இடம்பெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றனர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 476 ஓட்டங்களுக்கு பதிலளித்து ஆடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றுமுன்தினம் நிறைவுபெற்ற மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ஓட்டங்களைப் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் உள்ளது. “பலோ  ஏன்’ ஜத் தவிர்ப்பதற்கு அந்த அணி இன்னும் 6 ஓட்டங்களைப் [...]

இலங்கை அணிக்கு வலுச்சேர்த்தது மஹேல ஜெயவர்த்தனவின் சதம்

கயானா, மார்ச் 25
மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 476 ஓட்டங்களைக் குவித்து டிக்ளேயர் செய்தது. நேற்றுமுன்தினம் நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன சதம் அடித்து அணி வலுப்பெற உதவினார்.
பதிலளித்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றுமுன்தினம் நிறைவுபெற்ற இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கயானாவில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் [...]