நியூஸிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் வலுவான நிலையில் இங்கிலாந்து

நேப்பியர், மார்ச் 25
அன்ட்ரூ ஸ்ரோரஸ் மற்றும் இயன் பெல் ஆகியோர் சதம் அடித்துச் சிறப்பிக்க நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையைப் பெற்றுள்ளது. நேற்று நிறைவுபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இயன் பெல் 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஸ்ரோரஸ் 173 ஓட்டங்களுடன் களத்தில் நம்பிக்கை தருகின்றார்.
முதல் [...]