பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி

கராச்சி, மார்ச் 22
பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று, இலங்கை அணி அங்கு சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.
கடந்த வாரம் லாகூரில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தமையத் தொடர்ந்து பாகிஸ்தானில் மார்ச் 29ஆம் திகதிமுதல் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா  தள்ளி வைத்தது. இந்தத் தொடர் மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது முடிவாகவில்லை. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பங்களாதேஷ், இலங்கை, இந்தியா ஆகிய அணிகளை தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. தொடர்ந்து போட்டிகள் இருப்பதால் [...]

இலங்கை மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

கயானா, மார்ச் 22
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கயானா விளையாட்டரங்கில் தொடங்கவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கைக் கிரிக்கெட் அணி, அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கவிருக்கின்றது.
இலங்கைக் கிரிக்கெட் அணி மஹேல ஜெயவர்த்தன தலைமையில் முதல் தடவையாக மேற்கிந்தியத் [...]