நீலங்களின் பெரும் போர்; சென். தோமஸ் திண்டாட்டம்
கொழும்பு,மார்ச் .15
எஸ்.எஸ்.ஸியில் இடம்பெற்றுவரும் றோயல் கல்லூரி அணிக்கு எதிரான மூன்று நாள் போட்டியில் சென். தோமஸ் கல்லூரி அணி பெரும் இக்கட்டில் உள்ளது. போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சென். தோமஸ் கல்லூரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை றோயல் கல்லூரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆரம்பித்தது. அணி மேலதிகமாக 3 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் ஆட்டத்தை “டிக்ளேயர்’ செய்வதாக றோயல் கல்லூரி அணி அறிவித்தது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சென். தோமஸ் கல்லூரி அணி ஓட்டம் எதுவும் பெற்றிராத போது முதல் விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டில் இணைந்த தஹீர், பெர்ணான்டோ ஆகியோர் தம்மிடையே 82 ஓட்டங்களைச் சேர்த்து அணியை ஆரம்பச் சரிவிலிருந்து மீட்டனர். தஹீர் 33 ஓட்டங்களுடனும், பெர்ணான்டோ 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஆட்டமிழக்க சென். தோமஸ் ஆட்டம் காணத் தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் சென். தோமஸ் கல்லூரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறும்.
Filed under: Uncategorized


