நீலங்களின் பெரும் போர்; சென். தோமஸ் திண்டாட்டம்

கொழும்பு,மார்ச் .15
எஸ்.எஸ்.ஸியில் இடம்பெற்றுவரும் றோயல் கல்லூரி அணிக்கு எதிரான மூன்று நாள் போட்டியில் சென். தோமஸ் கல்லூரி அணி பெரும் இக்கட்டில் உள்ளது. போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சென். தோமஸ் கல்லூரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை றோயல் கல்லூரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆரம்பித்தது. அணி மேலதிகமாக 3 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் ஆட்டத்தை “டிக்ளேயர்’ [...]

தகர்ந்தது ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம்; தரவரிசையில் தென்னாபிரிக்கா முதலிடம்

டாக்கா, மார்ச் 15
பங்களாதேஷûக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 30 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா வழித்தெடுத்தது.
தொடரை அப்படியே அள்ளியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் சபையின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைத் தகர்த்து முதலிடத்தைப் பிடித்தது தென்னாபிரிக்கா. இத்தொடர் ஆரம்பமாகும் போது தரவரிசைப் புள்ளிகளில் 0.191ஆல் ஆஸ்திரேலியாவை விடப் பின்தங்கியிருந்த தென்னாபிரிக்கா தற்போது 129 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 127 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
பங்களாதேஷûக்குச் [...]