பட்டம் வென்றார் டெமன்ரீவா

டுபாய், மார்ச் 03
ரஷ்யாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான எலீனா டெமன்ரீவா, டுபாய் பகிரங்க டெனிஸில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
டபிள்யூ.ரி.ஏ. அந்தஸ்துப் பெற்ற டுபாய் பகிரங்க டெனிஸ் கடந்த ஒரு வாரகாலமாக ஜக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டித் தொடரின் இறுதியாட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வீராங்கனைகளான 2ஆம் நிலை சுவற்ல்னா குஸ்நெற்சோவா மற்றும் 8ஆம் நிலை எலீனா டெமன்ரீவா ஆகியோர் பலப்பரீட்சையில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய குஸ்நெற்சோவா, முதல் செற்றை 6:4 [...]

இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி பங்களாதேஷ்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்
இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி பங்களாதேஷ்

சிட்டகொங், மார்ச் 03
சிட்டகொங்கில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி “பலோ ஒன்’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன்படி தனது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் தோல்வியை எதிர்நோக்கியுள்ளது.
முன்னதாக நேற்றுமுன்தினம் நடந்த 2ஆம் நாள் ஆட்டத்தில் சிமித்மக்கென்ஸி ஜோடி பிரமாதமாக ஆடியது. சிமித்தைத் தொடர்ந்து மெக்கன்சியும் இரட்டை [...]

முத்தரப்புத் தொடரின் முதலாவது இறுதியாட்டச் சவால்

முத்தரப்புத் தொடரின் முதலாவது இறுதியாட்டச் சவால்
சச்சின் சதம்; இந்தியாவுக்கு ஜெயம்
6 விக்கெட்டுகளால் மண்கவ்வியது ஆஸி.
சிட்னி, மார்ச் 03
சச்சின் டெண்டுல்கர் 42ஆவது சதம் விளாச, கொமன்வெல்த் பாங்க் முத்தரப்புத் தொடரின் முதல் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
சிட்னியில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் 240 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 45.5ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவுசெய்தது.
ஆரம்பவீரராகக் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் இறுதிவரை [...]