பங்களாதேஷ் உடனான 2ஆவது டெஸ்ட்
உலக சாதனையை நோக்கி தென்னாபிரிக்க அணி
முதல்நாளில் விக்கெட் இழப்பின்றி 405 ஓட்டங்கள்
சிட்டகொங், மார்ச் 01
ஆரம்ப வீரர்களான கிரேம் சிமித்தின் இரட்டைச் சதமும், நீல் மக்கென்ஸியின் சதமும் கைகொடுக்க பங்களாதேஷûக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி மிகவும் பலமான நிலையைப் பெற்றுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 405 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டுக்காக 413 ஓட்டங்கள் சேர்த்துள்ளமையே உலக சாதனையாக இருந்துவருகின்றது. 52 வருடங்களாக நீடித்திருக்கும் அந்தச் சாதனையை இன்று சிமித் மக்கெய்ன்ஸி ஜோடி முறியடித்து புதிய உலக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1956ஆம் ஆண்டு இந்திய ஆரம்ப ஜோடிகளான மங்கட் றோய் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்காக 413 ஓட்டங்களைச் சேர்த்து சாதனை புரிந்திருந்தனர்.
டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்காக 400 ஓட்டங்களுக்கு மேல் சேர்ப்பது இது மூன்றாவது தடவையாகும். முதலிரண்டு இடங்களிலும் (413, 409) இந்திய அணி உள்ளது.
பங்களாதேஷûக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் பங்கேற்கின்றது. தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சிட்டகொங்கில் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
கிரேம் சிமித் மற்றும் நீல் மக்கெய்ன்ஸி ஆகியோர் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இருவரும் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடிய கிரேம் சிமித் தனது 4ஆவது இரட்டைச் சதத்தையும், மக்கெய்ன்ஸி தனது 3ஆவது சதத்தையும் நிறைவுசெய்து அசத்தினர். நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் கிரேம் சிமித் 223 ஓட்டங்களுடனும் (254 பந்துகள், 32 பவுண்டரிகள்,ஒரு சிக்ஸர்), மக்கெய்ன்ஸி 169 ஓட்டங்களுடனும் (288 பந்துகள், 20 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டைச் சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை நேற்று சிமித் தனதாக்கிக் கொண்டார். ஹேர்சல் கிப்ஸ் வசமிருந்த அந்த சாதனையை (3 இரட்டைச் சதங்கள்) நேற்று 4ஆவது இரட்டைச் சதத்தை நிறைவுசெய்த போது சிமித் தன்வசமாக்கினார்.
முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற பெருமையையும் தென்னாபிரிக்க நேற்றுப் பெற்றது. முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷûக்கு எதிராக இந்தியா பெற்ற 326 ஓட்டங்களே இதுவரை காலமும் சாதனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Filed under: Uncategorized



Hi, this is a comment.
To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.
ok