முத்தரப்புத் தொடர்; பாக். அசத்தல் வெற்றி!

அருள்ரங்கன்

மிர்பூர், ஜூன் 09
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்புத் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் சல்மான் பட் அரைச்சதம் கடக்க, பங்களாதேஷ் அணியை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பங்களாதேஷில் நேற்று ஆரம்பமான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று மிர்பூரில் நடந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. மழை காரணமாக 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு கம்ரன் அக்மல், சல்மான் பட் ஆகியோர் இணைந்து சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அப்துர் ரசாக் சுழலில் ஒரு சிக்ஸர் அடித்த கம்ரன் அக்மல் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த யுனிஸ்கான்(0) பரிதாபமாக “ரன் அவுட்’ ஆனார். தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்த சல்மான் பட் 70 ஓட்டங்களுடன் (10 பவுண்டரிகள்) பவிலியன் திரும்பினார்.
பின்னர் பொறுப்பாக ஆடிய முகமது யூசுப் அரைச்சதம் விளாசினார். “அதிரடி’ அப்ரிடி (20), அலொக் கபாலியின் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் யூசுப்பையும்(59), வெளியேற்றிய கபாலி திருப்புமுனை ஏற்படுத்தினார். கடைசிக் கட்டத்தில் மிஸ்பாஉல்ஹக் அதிரடியாக விளையாடினார். இவர் 39 ஓட்டங்களுடன் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 233 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
கடின இலக்கை விரட்டிய பங்களாதேஷ் அணி திணறல் தொடக்கம் கண்டது. நபீஸ்(9), ரகீபுல் ஹசன்( 8) விரைவாக வெளியேறினர். அடுத்து வந்தவர்கள் அப்ரிடியின் சுழலில் சிக்கினர். மனம் தளராமல் போராடிய அணித்தலைவர் அஷ்ரபுல் அதிகபட்சமாக 56 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பங்களாதேஷ் அணி 40 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக சல்மான் பட் தெரிவானார்.
முத்தரப்புத் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பகலிரவுப் போட்டியாக இந்தப் போட்டி நடைபெறுகின்றது.

German boss lauds Podolski double

Lukas Podolski’s double ensured Germany made a winning start to their Euro 2008 campaign against Poland in Klagenfurt.

Polish-born Podolski put Germany on the path to a deserved victory when he slid home Miroslav Klose’s pass from close range after 20 minutes.

Germany were dominant, with Poland keeper Artur Boruc saving brilliantly from Germany captain Michael Ballack.

And Podolski added his second with a powerful rising volley that left Boruc helpless with 18 minutes left.

It was Germany’s first victory in the tournament since they beat the Czech Republic to win Euro 96 at Wembley.

And their performance at the Worthersee Stadion, in the first 45 minutes in particular, suggested that Joachim Low’s side are in the mood to make amends for previous disappointments this time around.

Germany wasted a glorious opportunity to go ahead after only four minutes when Klose broke in behind a flat-footed Poland rearguard and ran on to Ballack’s pass.

He had only Boruc to beat, but decided instead to try to find the unmarked Mario Gomez, who was surprised by the pass and slid his effort wide with the goal at his mercy.

But Klose’s unselfishness brought greater reward after 20 minutes when he escaped the attentions of Poland’s defence again and squared for Podolski, who had the simplest of tasks to give Germany a lead they fully merited.

Germany were threatening to take full advantage of Poland’s lack of organisation at the back, but were almost hit by a sucker punch when Wojciech Lobodzinsi played in former Celtic striker Maciej Zurawski, but he pulled his shot wide when well placed.

It was one of the few attacking threats posed by Poland, but normal service was quickly resumed and Germany should have doubled their lead eight minutes before the interval.

Clemens Fritz created the opening on the right flank, but Gomez’s finish was poor and his effort rolled tamely across the face of goal.

Poland, as they had to, showed a greater sense of urgency after the break and were spurred by the arrival of Brazilian-born substitute Roger Guerreiro, who was on for the ineffective Zurawski.

He forced his way into a dangerous position after 58 minutes and it needed a timely intervention from Per Mertesacker to clear his cross.

Germany had gone off the boil in the second half, but substitute Bastian Schweinsteiger brought Boruc into action with a low drive from 25 yards which the Celtic keeper held safely.

And Boruc saved brilliantly from Ballack after 69 minutes, turning over acrobatically from the Germany captain’s rising drive at the end of a long passage of possession.

There was no reprieve for Poland, however, three minutes later when Podolski added his second, helped by a large slice of good fortune.

Klose miscued badly from Schweinsteiger’s pass, but the ball fell invitingly for Podolski, who volleyed high past Boruc to seal the German victory.

Guerrero almost threw Poland a lifeline with seven minutes left, when his excellent cross found Southampton’s Marek Saganowski, but his near post effort was blocked by German keeper Jens Lehmann.

But it was a rare moment of discomfort for Germany, who made a typically efficient and impressive start to Euro 2008.

நன்றி - பி.பி.ஸி.

யூரோ கிண்ணக் கால்பந்தாட்டம்; போலந்தை வீழ்த்தியது ஜேர்மனி

Lukas Podolski

கிளகென்பர்ட், ஜூன் 09
லுகாஸ் பொடொல்ஸ்கி இரண்டு கோல்களை அடித்துக்கொடுக்க, யூரோ கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடந்த லீக் ஆட்டமொன்றில் 20 என்ற கோல் கணக்கில் போலந்தை ஜேர்மனி வெற்றிகொண்டது.
2008ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய அணிகள் மோதும் யூரோ கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரை சுவிற்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இத்தொடரில் 4 பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நேற்று ஆஸ்திரியாவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சொந்த மண்ணில் குரோஷியாவை எதிர்கொண்டது ஆஸ்திரியா. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே குரோஷியாவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு அமைந்தது. 4ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் கிடைத்த அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட குரோஷிய வீரர் லுகாமோட்ரிக், அற்புதமாகக் கோலைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
பதிலடிகொடுக்க ஆஸ்திரியா கடுமையாகப் போராடியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருந்தும் ஆஸ்திரியாவால் பதில் கோலை கடைசிவரை அடிக்க முடியாமல் போனது. இறுதியில் குரோஷியா 10 என்ற கணக்கில் வெற்றியைச் சுவீகரித்தது.
ஆஸ்திரியாவின் கிளகென்பர்ட்டில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில்”பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஜேர்மனியும், போலந்தும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆரம்பத்திலிருந்தே ஜேர்மனி வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர்களது தாக்குதல் ஆட்டத்துக்கு முன்பு போலந்து வீரர்கள் நிலைகுலைந்து போயினர்.
ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் ஜேர்மனி முதல் கோலை அடித்தது. மிரோஸல்வ் குளுஸ் அடித்த பந்தை லுகாஸ் பொடொல்ஸ்கி கோலாக்கினார். முதல்பாதி ஆட்டத்தில் ஜேர்மனி 10 என்ற கோல் கணக்கில் முன்னிலையிலிருந்தது.
73ஆவது நிமிடத்தில் ஜேர்மனி இரண்டாவது கோலை அடித்தது. பொடொல்ஸ்கியே இந்தக் கோலையும் அடித்தார். இறுதிவரை போலந்து வீரர்களால் பதில் கோலை அடிக்க முடியவில்லை. முடிவில் ஜேர்மனி 20 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது.
யூரோ கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேர்மனிக்குக் கிடைக்கும் முதல் வெற்றி இதுவாகும். அதுவும் மூன்று தடவைகள் ஜேர்மனி யூரோ கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜேர்மனி அணிக்காக இரண்டு கோல்களையும் அடித்த பொடொல்ஸ்கி, போலந்து நாட்டில் பிறந்தவர். பின்னர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றிருந்தார்.
ஜேர்மனி அடுத்த ஆட்டத்தில் குரோஷியாவை 12ஆம் திகதி எதிர்கொள்கின்றது. அதேநாளில் போலந்து, ஆஸ்திரியாவைச் சந்திக்கின்றது. 

England seal emphatic victory

Third Test, Trent Bridge (day four)
England 364 bt New Zealand 123 & 232 by an innings and nine runs

By Jamie Lillywhite

Kevin Pietersen and Ryan Sidebottom

Pietersen and Sidebottom both had major influences on the match

England secured victory by an innings and nine runs in the final Test to seal a 2-0 series triumph over New Zealand.

They needed barely an hour to capture the remaining five Kiwi wickets, with Ryan Sidebottom taking four of them.

Needing 64 to make England bat again, the tourists added some quick early runs through lusty Jacob Oram strokes.

Oram hit two sixes in 50 from 39 balls, but Sidebottom’s swing was too much for the tail and man-of-the-match James Anderson’s ninth wicket settled it.

New Zealand’s position had the rather despondent air of England’s in the infamous Headingley Test in 1981.

It was actually better, as England were then 135-7 and 92 behind in their follow-on, but they had Ian Botham and added 201 for their final three wickets.


Briefly, it appeared that Oram might play some kind of Botham role.

Broad, with the exuberance of youth, a Test fifty and a vibrant blond mane, worked on the theory that Oram is susceptible to the short-pitched delivery.

The surface was really too benign to cause him problems and Oram swatted him away with relative ease.

But it has been the swinging ball that has done the damage in this match, and the canny Sidebottom knew that, picking up 4-12 from his morning spell.

Jacob Oram

Oram briefly scattered the spectators with some mighty, defiant hitting

Debutant Gareth Hopkins got one that both swung and bounced and from then on it was a relative procession.

Skipper Daniel Vettori looked weary from the rigours of another series defeat, no doubt reflecting on the previous Test at Old Trafford, when having been 229 ahead with nine second innings wickets intact, his team were bowled out for 114 and lost by six wickets.

Vettori’s own dogged batting form has dipped dramatically, which is another major factor in the outcome of the three matches.

Having made 173 runs in the first three innings during the winter series, the left-hander has scored just 13 in the last two Tests and here he sliced rather tamely to gully.

Sidebottom kept the ball moving in the corridor of uncertainty to oust Kyle Mills and Iain O’Brien, who tentatively prodded to first and second slip respectively.

Fittingly it was Anderson who applied the gloss, with the wicket of every bowler’s favourite batsman, Chris Martin.

He was swatted for an almighty six over long-on by Oram, who will no doubt be a dangerous customer in the limited overs matches that follow, but produced the ideal delivery for Martin.

The last man epitomised the general New Zealand frailty against an accurate swinging ball, edging to second slip to put England in good heart for the very different proposition that is Friday’s Twenty20 extravaganza.

Meanwhile, England’s series victory moved them up to third in the ICC’s Test rankings, one point above South Africa and just one point behind second-placed India.

Michael Vaughan’s men will move up to second if they beat South Africa later this summer, and India fail to win their forthcoming series in Sri Lanka.

நன்றி-பி.பி.ஸி

தொடரை வென்றது இங்கிலாந்து அணி

arulrangan 01

டிரன்ட்பிரிட்ஜ், ஜூன் 09
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் மூலம் தொடரை 20 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் சைட்பொற்றம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரன்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 364 ஓட்டங்களையும், நியூஸிலாந்து 123 ஓட்டங்களையும் எடுத்தன. “பலோஒன்’ பெற்ற நியூஸிலாந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது.
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் சைட்பொற்றத்தின் வேகத்தில் நியூஸிலாந்து வீரர்கள் திணறிப் போயினர். இவரது பந்துவீச்சில் ஹோப்கிங்ஸ்(12), வெட்ரோறி(1), மில்ஸ்(2), ஒபிரைன் (4) என வரிசையாக வெளியேறினார்கள்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜேக்கப் ஒரம் 39 பந்துகளில் அரைச்சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக கிறிஸ் மாட்டினின் (0) விக்கெட்டை அன்டர்ஸன் வீழ்த்த நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 232 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. அபாரமாகப் பந்து வீசிய சைட்பொற்றம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 20 என்ற கணக்கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் அன்டர்ஸன் தெரிவானார். தொடர் நாயகன் விருது இங்கிலாந்தின் அன்ட்ரூ ஸ்ரோரஸுக்கும், நியூஸிலாந்தின் டானியல் வெட்ரோறிக்கும் இணைத்து வழங்கப்பட்டது.
டெஸ்ட் தொடர் முடிவுற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அதற்கிடையில் இரு அணிகளும் எதிர்வரும் 13ஆம் திகதி ருவென்ரி/20 போட்டியில் மோதவுள்ளன.

King Nadal

சாதித்தார் நடால்

பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியின் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதியாட்டத்தில் நடப்புச் சாம்பியன் ரபேல் நடால்(தரவரிசையில் 2), சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரை 6:1, 6:3, 6:0 என்ற நேர் செற்கணக்குகளில் வீழ்த்தி பட்டம் வென்றார்.
களிமண் களநாயகன் நடால் பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியில் வீழ்த்த முடியாத வீரராக வலம் வருகிறார். இதுவரை இங்கு விளையாடியுள்ள 28 போட்டிகளிலும் வென்று சாதித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்த அவர், இன்று நடந்த போட்டியில் பெடரரை வீழ்த்தியதன்மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றார்.
இதன்மூலம் பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியில் தொடர்ந்து நான்கு பட்டங்கள் வென்ற சுவீடனின் ஜோனஸ் போர்க்மேன் சாதனையை நடால் சமன் செய்தார்.
தனது 11ஆவது பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் தொடரில் விளையாடிய பெடரர் ஒரு முறை கூட கிண்ணத்தை வென்றதில்லை. இவர் இதுவரை நடால் உடன் 17 போட்டிகளில் மோதியுள்ளார். இதில் நடால் 11இல் வெற்றி கண்டுள்ளார். களிமண் களத்தில் இவர்கள் விளையாடிய10 போட்டிகளில் நடால் 9இல் வெற்றி கொடி நாட்டியுள்ளார்.
கடந்த மூன்று தொடர்களில் பெடரர் ஒரு முறை அரையிறுதிக்கும் (2005), இரண்டு முறை இறுதியாட்டத்துக்கும் (2006, 2007) முன்னேறியுள்ளார். இந்த மூன்று போட்டிகளிலும் நடாலிடம் தோல்வியடைந்துள்ளார். ஆனால், இவர் இம்முறை கிண்ணத்தை வென்று சாதிப்பார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். நடாலின் ஆக்ரோஷ ஆட்டத்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெடரால் நிறைவேற்றமுடியாமல் போனது.

Nadal beats Federer for 4th consecutive French Open title

PARIS

By the fourth game, Rafael Nadal had Roger Federer kicking the clay in frustration. By the second set, the normally stoic Federer was screaming at himself.

The drubbing went on from there. Nadal won his fourth consecutive French Open title in a rout Sunday, again spoiling Federer’s bid to complete a career Grand Slam.

Dominating the world’s No. 1 player with astounding ease, Nadal swept six consecutive games early in the match and swept the final nine games to win 6-1, 6-3, 6-0.

It was Federer’s worst loss in his 173 Grand Slam matches, and the shortest Roland Garros men’s final in terms of games since 1977.

For the No. 2-ranked Nadal, it was merely another in a series of dominating victories. He lost only 41 games in seven matches.

The Spaniard became the second man to win four consecutive French Open titles. Bjorn Borg did it in 1978-81.

Nadal improved to 28-0 at Roland Garros, where he has won 84 of 91 sets. Only six-time champion Borg won more French Open men’s titles. And Nadal became the first man since Borg in 1980 to win the tournament without dropping a set.

Borg watched the final from the front row. Much of the crowd rooted for Federer, who arrived in Paris for the fourth consecutive year seeking to become the sixth man to win all four major titles. Each time he has lost to Nadal—in the semifinals in 2005, and in the final each of the past three years.

Spain's Rafael Nadal  reacts after winning a point to Switzerland's Roger Federer during the men's final at the French Open tennis tournament in Paris on Sunday June 8, 2008.

Spain’s Rafael Nadal reacts a…
AP - Jun 8, 11:07 am EDT

Fans chanted “Ro-ger! Ro-ger!” between games, but Nadal earned their cheers in the end. He won six consecutive games for a 2-0 lead in the second set as a desperate Federer tried everything to reverse the tide.

But when Federer played serve-and-volley on a second serve, Nadal lunged to hit a lob into the corner for a winner. When Federer tried to chip and charge off a return, Nadal passed him with a backhand.

And when Federer settled for playing from the baseline, he had little chance. It’s tough to hit shots where the relentless Nadal can’t reach them, and Federer probably tried too hard, with uncharacteristic errors flying from his racket.

Federer did gain a toehold in the second set when he won consecutive games for the only time for 2-all. But he lost serve at 3-4—hitting a deep volley that Nadal deftly ripped for a winner—and the match quickly slipped away from there.For Federer, the worst came at the end—a 6-0 set loss. The last time that happened to him was on a slightly smaller stage: the first round in 1999 at Queen’s against Byron Black.

On match point, Federer sailed a forehand long, and Nadal raised his arms in triumph. Nadal improved to 9-1 against Federer on clay, with the only loss coming in the 2007 Hamburg final.Other statistics that underscore Nadal’s dominance on the surface: He’s 22-1 in clay-court finals, and 41-0 in best-of-five matches on clay.Federer fell to 12-3 in Grand Slam finals, with all of the losses to Nadal.Federer’s far from alone in his French Open frustration. The list of Grand Slam champions who never won the Roland Garros title includes Pete Sampras, John McEnroe, Jimmy Connors, Boris Becker and Stefan Edberg.

கவுண்டி ஒருநாள் போட்டி: போபரா இரட்டைச் சதம்!

லண்டன், ஜூன் 6
இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் போட்டியொன்றில் இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் ரவி போபரா.
இதன்மூலம் 50 ஓவர் போட்டியொன்றில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் எஸெக்ஸ் பிராந்திய அணி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கவுண்டிப் போட்டிகளில் 7 வீரர்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை இந்தச் சாதனை நிலைநாட்டப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வீரர் பெற்ற 194 ஓட்டங்களே,  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட தனிநபர் அதிகூடிய ஓட்டஎண்ணிக்கையாகும்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற லெய்செஸ்ரர்ஸெயார் அணிக்கு எதிரான தொடரின் காலிறுதிப் போட்டியிலேயே எஸெக்ஸ் அணி வீரரான போபரா இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
முதலில் ஆடிய எஸெக்ஸ் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ஓட்டங்களைக் குவித்தது. 4ஆவது வீரராகக் களமிறங்கிய போபரா, தொடக்கத்திலிருந்தே அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரது முதல் 100 ஓட்டங்கள் 85 பந்துகளில் பெறப்பட்டன. அடுத்த 100 ஓட்டங்களும் வெறும் 52 பந்துகளில் மட்டுமே பெறப்பட்டது. கடைசி 50 ஓட்டங்களை 16 பந்துகளில் விளாசியிருந்தார். 195 ஓட்டங்களிலிருந்து சிக்ஸர் அடித்து அவர் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்த போபரா, 138 பந்துகளில் 201 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார். அவரது ஓட்டஎண்ணிக்கையில் 18 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்குகின்றன.
பதிலளித்து ஆடிய லெய்செஸ்ரர்ஸெயார் அணி 41 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

ஐ.சி.சியின் தரவரிசையில் சந்தர்போல் முன்னேற்றம்

டுபாய், ஜூன் 06
சர்வதேச கிரிக்கெட் சபையின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சந்தர்போல் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக தரவரிசையில் சிறந்த நிலையை அடைந்துள்ளார் சந்தர்போல்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பிரகாசித்துவரும் சந்தர்போல், 8ஆவது நிலையிலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
அன்டிகுவாவில் நடைபெற்ற ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமலிருந்த சந்தர்போல் முறையே 107 மற்றும் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்திருந்தார். கிங்ஸ்ரனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அவர் 118 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார். நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் அவரது தற்போதைய சராசரி 156.50 ஆகும். இவ்வாறு அவர் வெளிப்படுத்தி வரும் திறமைகள், அவரைத் தரவரிசையில் முன்னேற்றம் அடையச் செய்துள்ளன.
கடந்த 12 மாதங்களில் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சந்தர்போல்,106.20 என்ற சராசரிக்கு 1062 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். அவற்றில் ஐந்து சதங்களும் அடங்கும்.
நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட புதிய துடுப்பாட்டத் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசே 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றார். பந்துவீச்சாளர் தரவரிசையில் முரளிதரன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பிரகாசித்துவரும் பிரட் லீ 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்தோர் விவரம் வருமாறு:
மைக்கல் ஹசே (911 புள்ளிகள்), ரிக்கி பொண்டிங் (895 ), குமார் சங்ககார (893), முகமது யூசுப் (880), சந்தர்போல் (877), ஜக்கலிஸ் (877), மத்தியூ ஹைடன் (843), மஹேல ஜெயவர்த்தன (810), யுனிஸ்கான் (799), பீற்றர்ஸன் (750).
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இடம்பிடி த்தோர் விவரம் வருமாறு:
முரளிதரன் (897 புள்ளிகள்), டேல் ஸ்ரைன் (892 ), ஸ்ருவேட் கிளார்க் (854), பிரட் லீ (811), மக்காயா நிற்னி (777), சைட்பொற்றம் (719), சமிந்த வாஸ் (709), அனில் கும்ளே (708), சொய்ப் அக்தர் (684), ஷேன் பொண்ட் (675).